/ கதைகள் / சூறாவளி

₹ 100

ஷேக்ஸ்பியரின் கடைசி நாடகம் தமிழில் சுவைபட மொழிபெயர்க்கப்பட்டுள்ள நுால். மாய உயிரினங்கள், மந்திரம், தந்திரம், சூழ்ச்சி, அரசு கவிழ்ப்பு, காதல் என பல வகையாக பின்னப்பட்டு சுவாரசியம் தருகிறது. முழு பக்க கோட்டு ஓவியங்கள் அத்தியாயத்திற்கு ஒன்றாக அலங்கரிக்கின்றன. அந்த கால ஷேக்ஸ்பியரின் வாசகங்கள் இப்போதும் பொருந்துவது தான் ஆச்சரியம் தருகிறது. ஒரு காதல் வசனத்தில், ‘இறந்து விடு என்று சொல்லுங்கள்; சந்தோஷமாக சாகிறேன். மறந்துவிடு என்று மட்டும் சொல்லாதீர்...’ என உணர்வு ததும்புகிறது. மதுபானத்தை விட கொடிய போதை தருவது பணம், பதவி, புகழ் என்கிறது. உயிரோட்டமுள்ள வசனங்கள் நிறைய உள்ளன. பழமை வாழ்க்கை முறையை அறிய உதவும் நுால். -– சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை