/ ஆன்மிகம் / ஸ்ரீரங்க விஜயம் ஸ்ரீரங்கநாதர் திருவரங்கம் வந்த சரித்திரம்

₹ 160

பூலோக வைகுண்டமான திருவரங்கத்தில் கலியுக தெய்வம் கோவில் கொண்டு திகழ்வதன் பின்னால் உள்ள சுவையான தகவல்களை பக்தி ரசம் சொட்ட விவரிக்கும் நுால். கிளிச்சோழனுக்கு, கிளி உருவில் சுக மகரிஷியே உபதேசித்த கதையாக ஸ்ரீரங்க மஹாத்மியம் தொகுக்கப்பட்டுள்ளது. தேவதைகளில் எப்படி விஷ்ணு உயர்ந்தவரோ, மந்திரங்களில் எப்படி பிரணவம் உயர்ந்ததோ, அதுபோல திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கமே உயர்ந்தது என விளக்குகிறது.தீயோரை தண்டிக்கவும், நல்லோரை காக்கவும் தர்ம ஸம்ஸ்தாபனம் செய்யவும், மெய்யடியார்கள் மனதில் தியானிக்கவும் ஸ்ரீமன் நாராயணன் பல அவதாரங்களை எடுப்பதை விவரிக்கிறது. ஆலிலையில் இருந்தவர் மகா விஷ்ணுவாக உருவெடுத்த விதம், காவிரிக்கரை சந்திர புஷ்கரணி தடாக சிறப்பு, ஸ்ரீரங்கநாதர் கோவில் அருமை, பெருமைகளை சுவைபட விவரிக்கும் நுால்.– இளங்கோவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை