/ கட்டுரைகள் / சும்மா கிடைத்ததா சுதந்திரம்?

₹ 280

சுதந்திரம் என்ற உயரிய கருத்தை கேள்வியாக முன் நிறுத்தும் நுால். உண்மையிலேயே கடுமையாக போராடி பெற்றதா அல்லது யாரும் எதிர்படாமல் சும்மா கிடைத்ததா என்ற விவாதத்தை எழுப்புகிறது. புத்தகத்தில் கட்டுரைகள் சமூக, அரசியல், வரலாற்று பார்வையில் அமைந்துள்ளன. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்களித்த வீரர்களின் வரலாற்றை ஆதாரபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் எடுத்துரைக்கிறது. இது சிந்திக்க வைக்கும். முக்கியமாக இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் ஆங்கிலேய ஆட்சியின் திட்டங்களை, இந்திய தலைவர்களின் முடிவுகளை மாற்றுப் பார்வையில் கொண்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தங்கள் உயிரையும், உடலையும், வாழ்க்கையையும் தியாகம் செய்து, சுதந்திரத்தை பெற்றுத் தந்த விதத்தை உரைக்கிறது. வேராக களத்தில் நின்று, உயிரை பலி கொடுத்த வீரர்கள் பற்றிய கதை வடிவமாக, ஒவ்வொரு அத்தியாயத்திலும் நெஞ்சை உருக்கும் உணர்வுகளை ஏற்படுத்துகிறது. புத்தகத்தில் உள்ள 25 அத்தியாயங்களில், மறக்கப்பட்ட சுதந்திரப் போராளிகளின் கதைகள் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக பால கங்காதர திலகர், சித்தரஞ்சன் தாஸ், ஜான்சி ராணி, பகத் சிங் போன்ற தலைவர்களின் வாழ்க்கை சரிதைகள் அழுத்தமாக பதிவாகியுள்ளன. ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆவணங்கள், சமூக வரலாற்றின் மாற்றங்கள், நிகழ்வுகளின் பின்னணி என அனைத்தும் நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. புரட்சிகரமான வீரர்களின் கதைகளை, நேர்மையான பார்வையில், ஓர் ஆன்மிக உணர்வுடன் சேர்த்து பகிர்கிறது. இனிமையான நடையில் உள்ளது. மாணவர்கள், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் தேசிய உணர்வுடைய ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக அமையும். ஒவ்வொரு இந்தியனும் வாசிக்க வேண்டிய படைப்பு. – இளங்கோவன்


புதிய வீடியோ