/ ஆன்மிகம் / சொரூப மாலை
சொரூப மாலை
ஆன்மக் கவித்திரட்டு, ஆன்மக் கீதத்திரட்டு என வடிக்கப்பட்டுள்ள புத்தகம். நடிகர் கமல் ஹாசன் எழுதிய கடவுள் கவிதைக்கு பதிலும் தரப்பட்டுள்ளது. இரண்டு வரியில் கவிதை மற்றும் பதில்களாக அமைந்துள்ளன.கமல் ஹாசன் பாடலில், ‘பரணிகள் போற்றிடும் உயிர் கொல்லி மன்னருக்கு தரணி தந்தது தாக்குமாம்’ என்பதாகும். இதற்கு, இரு வரிகளில், ‘பணிவைப் போற்றி அகந்தையை கொல்பவருக்கு பரணி அது ஆகுமாம்’ என கருத்து தெரிவித்துள்ளது.‘தன்னை அறிவது தான் உண்மை’ என்ற ரமணரின் கருத்தை சினிமா பாட்டு மெட்டு அமைப்பில் எதிரொலிக்கிறது. இதயத்தின் உண்மை விளங்காதோ என்ற பாடல், ‘தரை மேல் பிறக்க வைத்தான்’ என்ற பாடல் மெட்டில் அமைந்துள்ளது. மனதில் இடம் பிடிக்கும் அற்புத நுால்.– சீத்தலைச் சாத்தன்