/ கட்டுரைகள் / தமிழர் மேலாண்மையியல்
தமிழர் மேலாண்மையியல்
பழந்தமிழர் மேலாண்மை கோட்பாடுகளை ஆராய்ந்து கருத்துகளை தொகுத்துள்ள நுால். மேலாண்மையியல் சார்ந்த தகவல்களை முதல் பகுதி அறிமுகமாக தருகிறது. தொடர்ந்து, சங்க இலக்கியத்தில் பல்துறை மேலாண்மை என்ற தலைப்பில் வேளாண்மை, நெசவு தொழில் நுட்பவியல், மருத்துவம், நீர் மேலாண்மையியல் சார்ந்து ஆய்வு செய்து கருத்துகள் தெளிவாக தொகுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, திருக்குறளில் தனிமனிதன், குடும்பம், அரசியல், தொழில், கல்வியியல் குறித்த மேலாண்மை செய்திகளை வழங்குகிறது. காப்பியங்களில் காணப்படும் சமுதாய மேலாண்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பக்தி மற்றும் சித்தர் இலக்கியங்களில் காணப்படும் மேலாண்மை கோட்பாடுகள் குறித்தும் விளக்கும் நுால். – மதி




