/ சட்டம் / தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994
தமிழகத்தில் ஊராட்சிகள் சட்டம் 1994 அமலுக்கு வந்தபின், உள்ளாட்சி நிர்வாகம் பரவலாகியுள்ளது. அதன் மூலம் நடக்கும் தேர்தலில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பதவி ஏற்கின்றனர். உள்ளாட்சி நிர்வாகம் மக்களாட்சி மயமாகி வருகிறது. இந்நிலையில், இந்த சட்ட நடைமுறை பற்றி தெரிந்து கொண்டால் தான், நிர்வாகத்தை சிறப்பாக நடத்த முடியும்.அதற்கு உதவும் வகையில், சட்டத்தை தமிழில் தரும் நுால் இது. உள்ளாட்சி முறையை அறிந்து வலுப்படுத்த உதவும். உள்ளாட்சி துறை பணி தேர்வு மாதிரி வினாத்தாளும் இதில் இடம் பெற்றுள்ளது. அரசு பணியில் சேர விரும்புவோருக்கு மிகவும் உதவும்.உள்ளாட்சி பிரதிநிதிகள், பணியாளர்கள், சட்டம் அறிந்து செயல்பட விரும்புவோருக்கு ஏற்ற வகையில் எளிமையாக தரப்பட்டுள்ளது.