/ மருத்துவம் / தலையாய நோய்களும் தவிர்க்கும் முறைகளும்
தலையாய நோய்களும் தவிர்க்கும் முறைகளும்
உலகில் தொற்றும் நோய்களைவிட, தொற்றா நோய்களால் நேரும் மரணங்களே அதிகம் என்று விளக்கும் நுால். நோய்களை தடுக்கும் முறைகள், விழிப்புணர்வு, சிகிச்சைகள் பற்றியும் எழுதப்பட்டுள்ளது.நீரிழிவு, உடற்பருமன், மாரடைப்பு, சிறுநீரகம் செயல்இழப்பு உட்பட பல்வேறு வியாதிகள் பற்றி தகவல்கள் உள்ளன. இதய நோய்களுக்கு புதிய சிகிச்சை முறை, மாரடைப்பை தவிர்க்கும் வழிமுறை விளக்கமாக தரப்பட்டுள்ளன. மாரடைப்பைத் தடுக்கும் ஐந்து கட்டுப்பாடுகள் சொல்லப்பட்டுள்ளன. புகைபிடிக்காது இருத்தல், கொழுப்பு குறைத்தல், உடல் பருமன் குறைத்தல் போன்றவற்றை கடைபிடிக்க அறிவுரைக்கிறது. நோயின்றி வாழ வழிகாட்டும் மருத்துவ நுால். –- முனைவர் மா.கி.ரமணன்