/ புத்தக மதிப்புரை / தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் (பாகம்- – 7)
தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் (பாகம்- – 7)
திடுக்கிட வைக்கும் மர்மங்கள் நிறைந்த நாவல்களின் தொகுப்பு நுால். நாவலுக்குள் நாவல் என ஐந்து நாவல்கள் இடம் பெற்றுள்ளன. மனிதர்கள் இல்லாத தீவு, மூவரை விழுங்கிய முதலை, ஆயிரம் கண்கள், மூடிக் கிடக்குதே உன் நெஞ்சம், முரட்டுப்பெண் ஆகிய கற்பனை கதைகள் இடம் பெற்றுள்ளன. மனிதர்கள் இல்லாத தீவு என்ற கதை கொலை விசாரணையில் தொடங்குகிறது. கரடி பொம்மை, கைத்துப்பாக்கி, பாழடைந்த பங்களா, போலீஸ் படை ரகசிய திட்டம் என செல்கிறது. திடுக்கிடும் தகவல்களோடு நாவல் எழுதும் முறையை சொல்லித் தருகிறது. துப்பறியும் கலையையும் கற்றுத்தருகிறது. நாவல் ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறது. துப்பறியும் நாவல்களின் தொகுப்பு நுால். – புலவர் ரா.நாராயணன்




