/ கட்டுரைகள் / தி மேக்கிங் ஆப் எ டிசர்ட்டேஷன் (ஆங்கிலம்)
தி மேக்கிங் ஆப் எ டிசர்ட்டேஷன் (ஆங்கிலம்)
முனைவர் பட்டத்துக்காக மேற்கொண்ட செயல்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். பெருநிறுவன தலைமை பதவியில் தனித்துவமாக செயல்பட்டதை விளக்குகிறது. ஆராய்ச்சியில் ஈடுபட விரும்புவோருக்கு வழிகாட்டி உதவும் வகையில் உள்ளது. முனைவர் பட்டம் பெறுவதற்கான செயல்முறை குறித்த நடைமுறை கையேட்டின் முன்மாதிரி புத்தகம். ஆய்வு அணுகுமுறை படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்து வாழ்க்கை நிகழ்வுகளையும், எதிர்கொண்ட சவால்களையும் உயிரோட்டமுடன் விவரிக்கிறது. முனைவர் பட்டப் படிப்பை மேற்கொள்வோருக்கு வேண்டிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, விழிப்புணர்வுடன் செயல்பட்டு முனைவர் படிப்பை நிறைவேற்ற வழி காட்டும் நுால். – மதி




