/ ஆன்மிகம் / தேசிகப் பிரபந்தம் சில துளிகள்
தேசிகப் பிரபந்தம் சில துளிகள்
அவதார புருஷர் சுவாமி தேசிகர் வாழ்க்கை குறித்த நுால். வைணவ நெறியை பரப்பி, 101 ஆண்டுகள் வாழ்ந்ததை குறிப்பிடுகிறது. கீதா பாஷ்யம், ஸ்ரீ பாஷ்யம், பகவத் விஜயத்தை இளமையிலேயே உபதேசமாக கேட்டு உணர்ந்து, 20ம் வயதில் வைஷ்ணவா சம்பிரதாய உரை நிகழ்த்தியது எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வாதத் திறன் பற்றியும் கூறப்பட்டுள்ளது. பிரபந்தங்களில் சிறந்த கருத்துகளை அறிய தருகிறது. அரங்கன், கண்ணபிரானாக அவதரித்த குழந்தையை அழிக்க வந்த சடாசூரனை கால்களால் உதைத்து அழித்ததை பாசுரமாக பாடியது பற்றி குறிப்பிடுகிறது. ‘சரணம் அடைந்தவருக்கு தான் அடிமை’ என கூறும் மனப்பாங்கு, இறையருள் சித்தி பெற்றவருக்கே வாய்க்கும் என்ற கருத்தை உரைக்கும் நுால். – சீத்தலைச்சாத்தன்




