/ புத்தக மதிப்புரை / தி சோழாஸ் (ஆங்கிலம்)
தி சோழாஸ் (ஆங்கிலம்)
சோழப் பேரரசின் செல்வாக்கை கூறும் நுால். சோழர்களின் தொன்மை, சங்ககால சோழர்கள், களப்பிரர் ஆட்சி, சோழர் மறுமலர்ச்சி, மாமன்னன் ராஜராஜன் பற்றிய விபரங்களை தருகிறது. கல்வெட்டுகள், செப்பேடுகள், புராணங்கள், ராமாயணம், மகாபாரத காவியங்களின் வழியாக வரலாற்றை பதிய வைக்கிறது. ராஜகேசரி, பரகேசரி என்ற பட்டங்கள் சோழருக்கு உள்ளதாக செப்பேடுகள் சொல்வதை எடுத்துரைக்கிறது. சிலப்பதிகாரம், பெருங்கதை, மனுநீதி, சிபி சக்கரவர்த்தி பற்றி பேசுகிறது. குலோத்துங்க சோழன் படையெடுத்து பல நாடுகளை கைப்பற்றி, கலிங்கப் போரில் வென்றதை எடுத்துக் கூறுகிறது. சுந்தர பாண்டியனிடம் தோற்று சோழ சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்றதையும் குறிப்பிடுகிறது. சோழர் சாம்ராஜ்ய வரலாற்று நுால். – முனைவர் மா.கி.ரமணன்




