/ ஆன்மிகம் / தினம் ஒரு தேவாரம்
தினம் ஒரு தேவாரம்
சிவ தலங்களை போற்றி பாடியருளிய தேவாரப் பாடல்களை தேர்ந்தெடுத்து பொருளுரை தரும் நுால். தேவாரப் பாடல்களை புரிந்து ஓதுவதற்கேற்ப எளிய நடையில் அமைந்துள்ளது. சிவன் மீது இறைமை மேலோங்கும் வருணனைகள், போற்றுதல்கள் பரவசம் தருகின்றன. பற்று அகலவும், பிறவிப்பயன் கிட்டவும், தீவினை நீங்கவும் தரிசனம் வேண்டி பொழிந்த பாடல்கள் கவர்கின்றன. ஒவ்வொரு பாட்டிற்குமான தலம், பாட்டை ஓதுவதால் கிடைக்கும் பலன், பொருளுரை குறிப்பிட்டு தரப்பட்டுள்ளது. பாடல்களில் சிவனின் பெருமைகளும், நடனச் சிறப்பும், உமையவள் மாட்சியும், சைவ சமய புராண கதைகளின் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. பன்னிரு திருமுறையில் இடம்பெறும் பாடல்கள் பற்றிய குறிப்புகளும் உடைய நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு