/ வாழ்க்கை வரலாறு / திப்பு சுல்தான்

₹ 60

ஆங்கிலேயருக்கு எதிராக நின்ற திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்று நுால். காசிகான் என்பவனிடம் மல்யுத்தம், நீச்சல், குதிரையேற்றம், போர்க்கலையை முறைப்படி பயின்றதை விவரிக்கிறது. உருது, பார்சி, அரபி, கன்னடம், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றிருந்ததை குறிப்பிடுகிறது. இஸ்லாமிய கோட்பாடு மற்றும் தியானம், வழிபாடு, யோகா கற்றதையும் உரைக்கிறது. கோவில், மடங்கள், கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு நன்கொடை அளித்தது பற்றி குறிப்பிடுகிறது. மது அருந்துவதை குற்றமாக்கியது, உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியது பற்றி கூறப்பட்டுள்ளது. ஆங்கிலேயரின் நவீன யுத்த தளவாடங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் வீர மரணம் எய்திய திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்று நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை