/ இலக்கியம் / திருக்குறள் நீதி இலக்கியம்

₹ 400

திருக்குறள் நீதி இலக்கியம் என நிரூபிக்கும் விதமாக படைக்கப்பட்ட நுால். உலக செம்மொழிகளில் உள்ள நீதி இலக்கியங்களோடு திருக்குறள் ஒப்பிடப்பட்டு, கலையழகு, செஞ்சொல் கவியின்பம், நீதி இலக்கியமாக அது விளங்கும் விதத்தை எடுத்துக் காட்டுகிறது. தமிழ் இலக்கியத்தில் திருக்குறள் பெற்றுள்ள மதிப்பீட்டை ஆராய்கிறது. இலக்கிய உலகில் திருக்குறளின் சிறப்பு, நீதி இலக்கியமாக விளங்கும் திறன் தெளிவுபடுத்தி காட்டப்பட்டுள்ளது. நீதி இலக்கியம், நீதியும் அறமும், நீதி இலக்கியத்தின் இயல்புகள், உலக மொழிகளில் நீதி இலக்கியங்கள் என, ஒவ்வொரு கட்டுரையும் ஆய்வு ரீதியில் உள்ளன. திருக்குறளின் சாரத்தை உலக அளவில் ஒப்புமைபடுத்தி காட்டும் நுால். – ஊஞ்சல் பிரபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை