/ வாழ்க்கை வரலாறு / திரு.வி.க வாழ்வும் தொண்டும்
திரு.வி.க வாழ்வும் தொண்டும்
323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை-40. (பக்கம்: 176) சிலரின் வாழ்க்கை வரலாற்றை படிப்பது பொழுதுமட்டுமே பயன்படும்; ஆனால், சிலரின் வாழ்க்கை வரலாறு, நாம் படித்து முடித்த பின், நம்மைச் சிந்திக்க வைத்து, நம் மனத்தில் சில மாற்றங்களைச் செய்து நம் வாழ்வு மேலும் சிறப்பாக அமைய உதவும். தமிழ்த் தென்றல் திரு.வி.க.,வைப் பற்றி, அவருடன் பல ஆண்டுகள் பழகி, நவசக்தியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய இந்நூலாசிரியர் தரும் தகவல் பலருக்கு மிகப் பெரிய மகிழ்வைத் தரும் என்று உறுதியாகக் கூறலாம். நூலின் ஆரம்பம் முதல் முடிவு வரை மிகவும் சுவையாக அலுப்புத் தட்டாமல் படிக்கும் வகையில், இந்நூலை எழுதியுள்ளார். திரு.வி.க., காலத்தின் அரசியல், சமுதாய நிலைகளையும் நாம் நன்கு உணர இந்நூல் உதவும். அனைவரும் படித்துப் பயன் அடையலாம்.