/ புத்தக மதிப்புரை / திருவோணனின் சிவிதைகள் 75

₹ 180

சித்தாந்தம் மற்றும் வேதாந்த கருத்துக் களின் குவியலாய் மலர்ந்துள்ள நுால். கிருஷ்ண பரமாத்மா பற்றிய கவிதை அச்சு வெல்லம் போல் இனிக்கிறது. கண்ணன் நாமம் வாழ்வின் பாதையை நலமாக்கும் என உறுதியாக உரைக்கிறது. பல்வேறு தொழில்கள் பற்றிய விவரிப்புகள் உள்ளன. ஆசிரியர் தொழிலின் சிறப்பை ‘ பலவும் கற்றுத்தருபவன்‘ என இயற்கையாக கூறப்பட்டுள்ளது. திமிங்கலம் பற்றிய செய்தியில், கடற்படையும் கண்டஞ்சும் கடல் சிங்கம் என விவரிக்கிறது. ஆண்டாள் பெருமையை, ‘பெரியாழ்வார் தத்தெடுத்த பெண் பிள்ளை, கருவறையில் மாதவனின் கைகளில் கன்னியாய்க் கலந்தாள்’ என உரைக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல்கலாம் மேன்மையை கூறுகிறது. அனுபவமாக உணர்ந்தவற்றை கூறும் நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை