/ மருத்துவம் / உணர்ச்சிகள்

₹ 250

பக்கம்: 416 இந்தப் புத்தகத்தை படிக்கும் எவரும் பாலியல் சார்ந்த பிரச்னைகளில், இத்தனை ரகங்களா என்று வியப்படையப் போவது நிச்சயம். நூலாசிரியர் பாலியல் மருத்துவத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். பிரச்னைகளோடு அவரை அணுகியவர்கள், அவருக்கு தெரிந்த பலரின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களைத் தொகுத்துக்கதைகளாக்கி தந்திருக்கிறார். "அது பற்றித் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே புனிதம் என்ற கருத்து எப்படியோ பரவி செக்ஸ் என்ற வார்த்தைக்கே பாவம், தவறு என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டு விட்டது. பாலியல் பற்றிய அறியாமை, பாமரர்களிடம் மட்டுமல்லாது படித்தவர்களிடமும் காணப்படுகிறது. சரியான புரிந்து கொள்ளுதல் இல்லாத காரணத்தினாலேயே, பலரது தாம்பத்திய வாழ்க்கை நரகமாகியிருக்கிறது என்று குறிப்பிடும் ஆசிரியர், மிகுந்த பொறுப்புணர்வோடு விரசம் எதுவுமில்லாமல் எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. வாலிபர் முதல் வயோதிகர் வரை அவசியம் எல்லாரும் படிக்க வேண்டிய நூல்.


சமீபத்திய செய்தி