/ ஜோதிடம் / உங்கள் கைரேகைப் பலன்களை நீங்களே பார்ப்பது எப்படி?
உங்கள் கைரேகைப் பலன்களை நீங்களே பார்ப்பது எப்படி?
குற்றவாளிகளைக் கண்டறிவது துவங்கி, இப்போதைய ஆதார் கார்டு வரையிலும் கைரேகை முக்கியத்துவம் பற்றி குறிப்பிடும் நுால். கைகளின் அமைப்பையும், கைரேகைகள், மேடுகள், விரல்கள் அமைப்பையும் கொண்டு வாழ்வில் நிகழப் போகும் நன்மை, தீமைகளைச் சுட்டிக்காட்டுகிறது. விரல்களை பெரு விரல், குரு விரல், சனி விரல், சூரியன் விரல், புதன் விரல் என வகைப்படுத்தி, அவற்றில் உள்ள மேடுகள், அவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியைக் கொண்டு கணவன் – மனைவி உறவு, செயல்திறன் போன்றவற்றைக் கணிக்கிறது. கைரேகைகளின் பலன்களை தெரிந்து கொள்ள உதவும் நுால்.– புலவர் சு.மதியழகன்