/ ஆன்மிகம் / வடமொழி – தென்மொழி சிவஞானபோதம்
வடமொழி – தென்மொழி சிவஞானபோதம்
சிவஞானபோதத்தை சைவ உலகம் அறிந்து கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள நுால். இந்த புத்தகத்தில் வடமொழி சிவாக்கிரம பாஷ்யம் பற்றிய செய்திகள், ஸ்ரீ நந்தியம் பெருமாள் உபதேசம் பெற்ற வரலாறு, மெய்கண்டார் வரலாறு, மாதவ சிவஞான சுவாமிகளின் வரலாறு உட்பட பல தகவல்கள் உள்ளன. முத்துக்குமார தம்பிரான் பதிப்பித்த செய்திகள் மற்றும் சிவஞானபோதம் சார்ந்து வெளிவந்த பதிப்புகள், வெளியீடுகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. இரு மொழி சிவஞான போதங்களையும், அது தொடர்பான வரலாற்றையும் கற்கும் ஆர்வம் உடையோருக்கு பயன்படும் அரிய நுால். – புலவர் சு.மதியழகன்




