/ புத்தக மதிப்புரை / வஞ்சிக்கப்பட்ட தேசம் திபெத்
வஞ்சிக்கப்பட்ட தேசம் திபெத்
திபெத் நாட்டின் புவியமைப்பு, வரலாறு தகவல்களை கொண்டுள்ள நுால். திபெத்தின் சமூக கலாசாரம், புத்த சமய பரவல், மறுபிறவி நம்பிக்கை பற்றி விரிவான செய்திகள் உள்ளன. உலகின் உயரமான இமயமலை பற்றிய செய்திகள் தரப்பட்டுள்ளன. பெண் துறவியர், மடாலயங்கள் பற்றி விவரிக்கிறது. விக்கிரம சீலா, தட்ச சீலா உட்பட பழைய பல்கலைக்கழக புகழ் கூறப்பட்டுள்ளது. தலாய்லாமாக்கள் புத்தரின் மறுபிறப்பாக நம்புவதை கூறுகிறது. தலாய்லாமா மதநல்லிணக்கம் கண்டதற்கு நோபல் பரிசு பெற்றதை குறிப்பிடுகிறது. உலகில் பல லட்சம் பேரைக் கொன்ற செங்கிஸ்கான் படை எடுப்பு விபரங்களும் தரப்பட்டுள்ளன. விடுதலைக்காகப் போராடும் திபெத் உலக நாடுகள் உதவியை நாடியுள்ளதையும் கூறும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்




