/ பெண்கள் / வாழ்க்கை நதியினிலே
வாழ்க்கை நதியினிலே
இல்வாழ்வை 56 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்திய பெண்ணின் சுயசரிதை நுால்.வாழ்வின் இனிய, துயர சம்பவங்கள், துணிவுடன் போராடிய சவாலான சந்தர்ப்பங்கள், அறம் வழுவா நிகழ்வுகள் சொல்லப்பட்டுள்ளன. குழந்தைகள் பெற்று, வளர்த்து ஆளாக்கியது, மேன்மக்களை சந்தித்து ஆசி பெற்றது பற்றி கூறப்பட்டுள்ளது. கணவர் துணையால் துணிவு ஏற்பட்டதை அடுத்த தலைமுறைக்கு அறிவிக்கிறது.போராட்டத்திற்கு பிறகு காதலனை கரம் பற்றும் சாதனை, வேதனையை மாற்றுகிறது. கரையேறியதும் தன்னை சார்ந்தவர்களையும் கரையேற்றி விடுவது, கடமை உணர்வை காட்டுகிறது. பணக்கார குடும்பத்தில் பிறந்து, பண்பு, அடக்கத்துடன் போராடி காதலித்து மணந்து, உழைப்பால் உயர்ந்தவரின் சுயசரிதை நுால்.– முனைவர் மா.கி.ரமணன்




