/ கதைகள் / வீணாதி வீணன் கதை

₹ 90

வீட்டைவிட்டு வெளியேறி, பசியால் வாடி, உழைத்து பிழைக்க முயன்ற வனின் கதைப்பாடல் நுால். உழைத்து பிழைக்க முடியாத இக்கட்டான சூழலில் பாட்டி ஒருவரின் ஆதரவால், படாடோபமாக மாற்றம் பெறுகிறான். ஊர் மக்களிடம், தான் குலசேகர மன்னனின் தண்டல்காரன் என்று பொய் கூறி ஏமாற்றி கோட்டை கட்டி படைபலத்தோடு வசிக்கிறான், வீணாதி வீணன். இதையறிந்த மன்னன் அவனை சிறைபிடித்து விசாரிக்கிறான். சேர்த்த செல்வம் முழுதையும் கொடுத்து வணங்கி தன்னிலை விளக்கமளித்த வீணனை மந்திரியாக்கி மெச்சுகிறான் மன்னன். பின் காவல் தெய்வமாக வணங்கப்பட்ட செய்தியையும் எடுத்துக்கூறுகிறது. புத்தகம், 1,028 வரிகளைக்கொண்டுள்ளது. நாட்டுப்புற நடையில் அமைந்த கதைப்பாடல் நுால். – பின்னலுார் விவேகன்


புதிய வீடியோ