/ சுய முன்னேற்றம் / வெற்றி உங்கள் அருகில்

₹ 50

நல்ல பண்புகளே சாதனைக்கு துாண்டுகோல் என எடுத்துரைக்கும் நுால். வெற்றி உங்கள் அருகில், சவாலும் சாதனையும், அன்பின் உறைவிடம், குறைகளை ஆராயாதீர்கள், லட்சியத்தை நோக்கி, தோல்வியில் கலங்காதீர், உழைப்பும் உயர்வும் உள்ளிட்ட 16 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. நல்ல எண்ணங்களே வெற்றிக்கு அடிப்படை என்கிறது. வெற்றிப்பாதையில் பயணிக்க திறமை, முயற்சி மட்டும் போதாது; அதையும் தாண்டி அன்பு, உறவு, பழக்க வழக்கங்கள் என பண்புகள் தேவை என வலியுறுத்துகிறது. செல்வமிருந்தால் வெற்றியாளராகி விட முடியாது என்கிறது. செல்வாக்கு பெற்றவரே வெற்றியாளராக திகழ முடியும் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறது. லட்சியத்தை நோக்கி நடை போடும் வாழ்விற்கு வழிகாட்டும் நுால். – வி.ராமலிங்கம்