/ தீபாவளி மலர் / விஜய பாரதம் தீபாவளி இதழ் 2025
விஜய பாரதம் தீபாவளி இதழ் 2025
தேசிய வளர்ச்சி மற்றும் குடும்ப அமைப்பின் சிறப்பை மையமாக வைத்து விஜய பாரதம் தீபாவளி சிறப்பு இதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்க நுாற்றாண்டு சிறப்பிதழாகவும் மலர்ந்துள்ளது. நாட்டு வளர்ச்சியின் முக்கியத்துவம், பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள உறுதித்தன்மை, தற்சார்பு சார்ந்த வளர்ச்சியின் சிறப்பு குறித்து கட்டுரைகள் அதிக அளவில் உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் கடமை குறித்த கருத்துகளும் உள்ளடங்கியுள்ளன. துறை சார்ந்த வல்லுனர்களின் கட்டுரைகள், அந்தந்த பொருண்மை சார்ந்த அறிவை விரிவாக்க உதவுகின்றன. அவை பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றன. ஹிந்து மதம் கடைப்பிடிக்கும் சிறப்பு அம்சங்களை கூறுகின்றன. தேசியத்தின் சிறப்பு, தெய்வீகத்தின் பெருமையை எடுத்துரைத்து தேசிய உணர்வை வளர்க்கிறது விஜய பாரதம் தீபாவளி மலர். – விநா




