/ புத்தக மதிப்புரை / யானைக் காதல்
யானைக் காதல்
யானையுடன் மனிதர்களுக்கு உள்ள உறவு நிலையை நெகிழ்வுடன் தரும் நுால். யானைகளுடன் நேரடியாக பெற்ற அனுபவம் மற்றும் யானை பராமரிப்பாளர்களிடம் கிடைத்த தகவல்களின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. குழந்தை பருவத்தில் யானை மீது ஏற்பட்ட அபிமானம், ஆர்வம், கற்பனை, வியப்பு செயல்பாடுகள் தனித்துவமாக தரப்பட்டுள்ளன. தகவல்கள், கவித்துவம் நிறைந்த நடையில் ஈர்க்கும் வகையில் தரப்பட்டுள்ளன. நீலகிரி, முதுமலையில் யானை பராமரிப்பு மையத்தில் பணியாற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பணியாளர்களின் அனுபவ பேட்டியில் தகவல்கள் நிறைந்துள்ளன. யானைகளை பராமரிப்பதில் உள்ள நெகிழ்வான செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யானைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே உள்ள உறவு நிலை விவரிக்கப்பட்டுள்ளது. தக்க ஓவியங்களுடன் அமைந்துள்ள நுால். – ஒளி




