திருக்குறளை முன்வைக்கும் புதிய பார்வை. புதிய திறனாய்வுக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவான இந்நூல், திருக்குறளை மைய இழையாக வைத்துப் பின்னப்பட்டுள்ளது. பின் நவீனத்துவ வாசிப்பில் எழுதப்பட்டிருக்கிறது. ஆய்வுக்கட்டுரைகள் பல, உழுதசால் உழுவதையே வழக்கமாகக் கொண்டிருக்க, இந்நூல் அதிலிருந்து விலகி, வேறுபட்டு, புதிய கண்ணோட்டத்தில் பயணித்துள்ளது. நூலின் தலைப்பே கூட ஒரு புதிய அணுகுமுறைதான். ஒன்பது தலைப்புகளில் அமைந்துள்ள கட்டுரைகளில், ‘அயன்மை என்னும் பரத்தமை’, ‘அறனெனப்படுவது அரணேயாம்’, ‘கோன்மையின் பண்பாவது பரியாயம்’, ‘வாய்மை படிற்றொழுக்கம் வஞ்சகமனம்’ முதலியவை திருக்குறள் பின்னணியில் எழுதப்பட்டுள்ளன. பின் நவீனத்துவத்தின் கருத்தாளர்களான மிசேல் பூக்கோ, நீட்ஷே போன்றோரின் சிந்தனைகளைக் கட்டுரையினுாடே தந்து தம் எண்ணங்களுக்கு வலிமை சேர்த்துள்ளார் ஆசிரியர். பரத்தமை என்பதைச் சங்க காலம் சமூகத் தீமையாகக் கருதவில்லை என்ற கருத்தை முன்வைக்கும் ஆசிரியர், சங்க காலத்திற்குப் பின் சமுதாய வளர்ச்சியில் பரத்தையர் குறித்த மதிப்பீடுகள் மாற்றம் பெற்றிருந்தன என்ற தம் கருத்து முடிவை முன்வைத்துள்ளார். சொத்துடைமைச் சமூகத்திற்குத் தகாதவளாகப் பரத்தை காணப்பட்டாள் என்ற கருத்தை நிறுவுகிறார். அறம் காலந்தோறும் மாறக்கூடியது என்ற கருத்தை பூக்கோவின் சிந்தனைகளோடு எடுத்துக்காட்டும் ஆசிரியர், ‘அறமொழியில் உருவான திருக்குறள் இலக்கியத்தின் சாயலைப் பெற்றிருந்த போதிலும் சமத்காரமாக மொழியாடலைச் செய்யும் சாமர்த்தியம் மிக்கதாக இருப்பதைக் காணமுடியும்’ என்று நிறுவ முயன்றுள்ளார். வள்ளுவர் கூறும் செங்கோன்மை, கொடுங்கோன்மை என்ற அதிகாரங்களை, ஆளும் வர்க்கத்தின் ஒழுங்குமுறை அல்லது கட்டுப்படுத்துதல் என்ற நோக்கில் இரண்டாவது கட்டுரையை அணுகி உள்ளார். ‘கொள்ளற்க வில்லேர் உழவர் பகை’ என்ற கட்டுரை, திருவள்ளுவர் காட்டும் மன்னரைச் சேர்ந்தொழுகல், அவையறிதல் ஆகிய அதிகாரங்களின் அடிப்படையில் அமைந்து உள்ளது. அரசனோடு நட்பும், நட்பின்மையுமான கருத்தாக்கங்கள் கொண்டது இக்கட்டுரை. நன்மை, தீமை என்ற இருமைகளை எதிர்வினையாடலாகக் கொண்டு அதை அறமதிப்புடையனவாகவும், அறமதிப்பற்றனவாகவும் விரித்துரைப்பதை இக்கட்டுரையில் காணலாம். வாய்மை என்ற வள்ளுவரின் கருத்தாக்கத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி ஆராய்கிறது, ‘வாய்மை படிற்றொழுக்கம் வஞ்சகமனம்’ என்ற கட்டுரை.திருக்குறளின் காமத்துப்பால், 28 அதிகாரத்தின், 280 பாடல்களும் என்று பக். 123ல் எழுதியிருப்பதை அடுத்து, வரும் பதிப்பில், 25 அதிகாரம், 250 பாடல்கள் என்று திருத்திக் கொள்ள வேண்டும். அதே போல, ஒற்றுப் பிழைகள் மிகுதியும் உள்ளதையும் ஆசிரியர் கவனத்தில் கொள்வாராக. புதிய கோணத்தில் வெளிவந்திருக்கும் இந்நூல், அதை புதியதோர் அணுகுமுறையில் வைத்துக் காண்பதற்கும் உதவும்.– ராம.குருநாதன்
அறனெனப்படுவது யாதெனின்
-
பாவை பப்ளிகேஷன் (பி) லிட்., 142, ஜானிஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 130. விலை: ரூ.50).மொழி பெயர்ப்பு என்பது ஒரு கலை. சிந்தனையைத் தூண்டும் கலை. எனவே, மொழி பெயர்ப்புக் கலை பற்றிய உணர்வும், ஞானமும் நமது இன்றைய தேவை. ஏற்கனவே இத்துறையில் உள்ளவர்கள் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ளுதலும் அவசியம். இப்புத்தகம் இந்த வகையில் பயனுள்ள பல தகவல்களை, வழிகாட்டுதல்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஆசிரியர் எடுத்துக்காட்டாகக் கூறியுள்ள பல மேற்கோள்கள், சான்றுகள் பிரமாதமாக உள்ளன. இத்துறையில் இதுவரை வந்துள்ள நூல்களின் வரிசையில் இப்புத்தகத்திற்கு தனி மரியாதையும் கவுரவமும் நிச்சயம் உண்டு.
-
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 255. விலை: ரூ.95). ஆனந்த விகடன் இதழில் வெளியான தமிழக பிரபலங்கள் பலரின் விஷய கனமிக்க பேட்டிகளின் தொகுப்பு நூல் இது. தமிழ் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறையுள்ள, அதற்கான ஒவ்வொரு வகையில் உழைக்கிற அறிவு சார்ந்த பெருமக்கள் பலர் கூறுகிற அரிய கருத்துக்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது "தமிழ் மண்ணே வணக்கம்! இன்றைய தலைமுறை அந்நியக் கலாசாரத்தின் தலையாட்டிப் பொம்மையாக மாறிப் போனது எதனால்? யானைக் கட்டிப் போரடித்த தமிழனின் விளை நிலங்கள் "ரியல் எஸ்டேட்'களாக மாறியதன் பின்னணி என்ன? என்பது போன்ற கனமான விஷயங்களில் நம் அறிவைத் தூண்டி, சிந்திக்க வைக்கின்றனர் ஒவ்வொருவரும். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஜெயகாந்தன், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், அசோகமித்திரன், தமிழருவி மணியன் போன்ற பல்துறை வித்தகர்கள் 44 பேரின் விரிவான பேட்டிகளும் அவர்களின் வண்ணப் படங்களுமாய் ஜொலிக்கிறது இந்த நூல். நல்ல முயற்சி.
-
தமிழ்மணி பதிப்பகம், 127, ஈஸ்வரன் கோவில், தெரு, புதுச்சேரி-605 001. (பக்கம்: 144. விலை: ரூ.60). ஏறக்குறைய 150 ஆண்டுகள் பிரெஞ்சு ஆட்சி நடைபெற்ற புதுச்சேரியில், தமிழின் நிலை எப்படி இருந்தது என்பதைப் பற்றி 36 தலைப்புகளில் ஆசிரியர் படம் பிடித்து காட்டியிருக்கிறார். "சொல்லதெழுதல்' என்ற இலக்கணப் பயிற்சியை பத்தாம் வகுப்பு வரை பிரெஞ்சு அரசாங்கம் வைத்திருந்தது (பக்.135). இதனால் தமிழ் மொழியில் செம்மை தென்பட்டது' என்கிறார் ஆசிரியர்.தமிழ் வளர்ச்சிப் பணியில் தமிழர்களோடு பிரெஞ்சு அரசாங்கத்தார் ஈடுபட்டது தெரிய வருகிறது. பிரெஞ்சிந்திய தமிழ் நிலைப் பள்ளி அறிய விழைபவருக்கு இந்நூல் ஒரு விருந்து.
-
ஏழிசைச் சூழல், 62, மறைமலை அடிகள் சாலை, புதுச்சேரி-605001. (பக்கம்:181 விலை: ரூ.60.) தமிழிலக்கணம், இசைத் தமிழ் என இவ்விரண்டு புலங்களில் தேர்ச்சியும் புலமையும் பெற்ற முனைவர் இரா.திருமுருகன். 32 தலைப்புகளில் தாய் மொழி, தமிழிலக்கணம், இசைத் தமிழ், ஆட்சி மொழி என பல கட்டுரைகளை இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். பல செய்திகளை இவர் தன்னை முன்னிலைப் படுத்தி ஆய்வு நோக்கில் பதிவு செய்துள்ளதைப் பார்த்தால் இவர் ஆத்திகரா இல்லை நாத்திகரா என தடுமாற்றம் வருகிறது. "இருபத்தி ஏழாம் ஆண்டு, ஒன்றுபடுவோம் உருப்படுவோம், திருக்கோவிலில் தமிழிசைப் பாடுவதற்குத் தடை? ஆட்சி மொழியை இழிவுபடுத்தும் அரசு, என்று நம் தாய்மொழி அரியணை ஏறும்? அம்மையாரைப் பற்றிய அருவருப்பான ஆராய்ச்சி, இதுதான் கட்டாயத் தமிழா?' போன்ற பல கட்டுரைகளில் இவரது கோபமும் தமிழுக்கு கேடு நேர்ந்திடுமோ என்ற ஆதங்கமும் தெரிகிறது.
-
ஐந்திணைப் பதிப்பகம், 279 பாரதி சாலை, சென்னை-5. (பக் கம்:152 விலை: ரூ.70.) சேர நாட்டு கேரளத்து மண்ணிலிருந்து செந்தமிழை வளர்க்கும் படைப்புகளைத் தரும், எழுத்தாளர் வரிசையில், இவரது நூல் குறிப்பிடத்தக்கதாய் உள்ளது.அறிவியலில் தேசிய விருது பெற்ற ஆர்.வி.பெருமாள், ந.வேதாசலம் ஆகியோரைப் பற்றிய செய்திகள் அருமையானவை. சுவை தரும் தமிழ்க்கனி ரசக் கட்டுரைகள்!
-
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 122. விலை: ரூ.50). மேடைப் பேச்சுக் கலையை, மென்மையாய் விளக்கி, அதன் தன்மையை விவரித்து, அந்தக் கலையில் மேன்மை பெறச் செய்யும் மேடைப் பாடநூல்!பேசுவது முன்பாக தயாரிப்பது எப்படி? திட்டமிடுவது எப்படி? துணிவை வரவழைப்பது எப்படி? காலக்கட்டுக்குள் அருவி போல் கொட்டி, அனைவரையும் நிமிர வைப்பது எப்படி? என்று 15 தலைப்புகளில் விளக்கியுள்ளார்."ழ' "ல' "ள' ஆகிய ஒலி உச்சரிப்புகள் இன்றைய சில பேச்சாளருக்கு சரியாக இல்லாததை சரியாகக் குறிப்பிட்டு அதைத் திருத்த வழிகாட்டியுள்ளார்.இவரது சில மேடை அனுபவங்களும், மேற்கோள் சினிமா பாடல்களும், சில இடங்களில் மணி அடித்த பிறகும் பேசும் பட்டிமன்றப் பேச்சுப் போல "மிகை'யாக உள்ளது. சிறந்த பேச்சாளர்களின் பட்டியலில் இன்று கொடி கட்டிப் பறக்கும் பேச்சாளர் சு.கி.சிவம் போன்றவர்கள் விடுபட்டுள்ளனர். மேடைத் தமிழ்ப் பயணத்துக்கான கால அட்டவணை நூல்!
-
திலகம் பதிப்பகம், 17இ, பி-1 கே.கே.பொன்னுரங்கம் சாலை, ஓம்சக்தி நகர், வளசரவாக்கம், சென்னை-87. (பக்கம்:191. விலை:ரூ.85) பழந்தமிழ் சொற்கள் பண்டு தொட்டுத் திரிந்து, வளர்ச்சிப் பெற்று மருவி வழங்கும் நிலைகள் சிறப்பாக இதில் தெளிவாக்கப் பட்டுள்ளன. தமிழ்மொழி இலக்கண ஆய்வாளர்களுக்கு இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் பயன் உள்ளதாக அமையும்.
-
தமிழ் மொழியின் சிறப்பு, மருந்தில்லா மருத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் தகவல்களை எடுத்துக் கூறும் நுால். பல்வேறு புத்தகங்களை கற்றதில் பெற்ற அனுபவங்களை பல தலைப்புகளில் தொகுத்து எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறது. தமிழ் மொழியில் உயிர் மற்றும் மெய் எழுத்துகள் பிறப்பை கடிகார படத்துடன் அமைத்து புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் கூறப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கும், ஆங்கில மொழிக்கும் உள்ள தொடர்புகளை தக்க சான்றுகளுடன் கூறி சிந்திக்க வைக்கிறது. தமிழ் மொழி மீது கொண்ட தீராத பற்றால் ஆய்வில் ஈடுபட்டுள்ளது தகவல்கள் வழியாக தெரிகிறது. தொண்டு மனப்பான்மையை வெளிப் படுத்துகிறது. தமிழின் சிறப்புகளை பல்வேறு கோணங்களில் விளக்கும் நுால். – வி.ராமலிங்கம்
-
திருக்குறள் மூலமும் உரையும் பல அறிஞர் பெருமக்களால் எடுத்தாளப்பட்டு, பல்வேறு தலைப்புக்களால் நூல் வடிவம் பெற்றுள்ளன. நூற்றுக்கணக்கில் வெளிவந்துள்ள குறள் தொடர்பான நூல்களுள் சரித்திரச் செம்மல் சு.கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ள இந்த பழைய உரை பெரிதும் வித்தியாசமானதாகும்.தொல்லியல் துறையில் பணிபுரிந்து அரிய தொண்டாற்றியுள்ள நூலாசிரியர், பழைய உரைகளுள் ஒன்றாக விளங்கும் அரிய சுவடியின் பல்வேறு கூறுகளையும் பிறவற்றோடு ஒப்பிட்டு ஆராய்ந்து இந்நூலை உருவாக்கியுள்ளார். சில குறள்களுக்கு இவர் எழுதியுள்ள உரைகளில் சமண சமயம் சார்ந்த கருத்துக்கள் காணப்படுவதை எடுத்து விளக்கியிருக்கிறார். அறிஞர் எல்லீசின் திருக்குறள் கல் வெட்டை இவர் பதிப்பித்திருக்கிறார்.மேல் சித்தாமூர் ஜினகஞ்சி மடத்திலிருந்து தொல்லியல் துறைக்காக சமண சமயச் சார்புடைய திருக்குறள் ஓலைச் சுவடியை நன்கொடையாகப் பெற்று, அச்சுவடிகளை நகல் எடுத்து தேவைப்படும் குறிப்புக்களையும் இணைத்து இந்த நூலை உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர்.ஏற்கனவே நாலடியார் குறித்து ஆய்வு செய்துள்ள இவர், இந்த உரை நூலில் நாலடியார் தொகுப்பிலிருந்து பொருந்தும் இடங்களில் எல்லாம் குறளுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளதைப் படிக்கும்போது, ஆசிரியரின் ஆய்வுத் திறனை நம்மால் உணர முடிகிறது.உரை தோன்றிய காலத்தின் மொழி நடை, பழக்க வழக்கப் பண்பாட்டுக் கூறுகள், உரை கூறும் நெறி ஆகியவற்றை சு.கிருஷ்ணமூர்த்தி சிறப்பாக எடுத்துக்கூறியிருக்கிறார் என்பதை அணிந்துரை எழுதியுள்ள சுந்தரமூர்த்தி குறிப்பிட்டுள்ளது முற்றிலும் சரியானதே என்பதை இந்த நூலைப் படிக்கும்போது நாம் தெரிந்து கொள்கிறோம். நூலகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் இடம் பெற வேண்டிய சிறந்த புத்தகம்.
-
பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை- 600 108 போன்: 044 2527 0795; 3253 0516; 2523 4576; மின் அஞ்சல்: paarinilayam@yahoo.co.in
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்