Advertisement

FLASH எனும் நுண்கலை நுணுக்கம்:

₹ 170

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை - 17. (பக்கம் 216)கணினியின் மென்பொருள்களில் பிளாஷ் எனும் மென்பொருளும் ஒன்று. இந்த மென்பொருளின் உதவியால் ஒளிப்புள்ளிகளால் உருவாக்கப்பட்ட ஒளிப்படங்களை அசைவூட்டுப் படங்களாக ஆக்க முடியும். இந்த அசைவூட்டுப் படங்கள் மேம்படுத்தப்பட்டு வரைபட உத்தி எனத் திரைத்துறையில் பயன்படுத்தப்படுகிறது.இந்த பிளாஷ் எனும் மென்பொருள் பற்றிய செய்திகளை இந்நூல் தொகுத்துத் தருகிறது. மேலும், பிளாஷ் எனும் மென்பொருளின் துணை கொண்டு உருவாக்கப்படும் ஒளிப்படத்தில் வண்ணம் சேர்த்தல், பல்வேறு படிமநிலைகளில் அமைத்தல், சிறிய அளவிலான அசைவூட்டப்படம், விளையாட்டு மென்பொருள்கள் ஆகியவை எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதைத் தெளிவாக விளக்குகிறது. கணினித்துறை சார்ந்தவர்கள் மட்டும் இந்த நூலை வாங்கிப் படிப்பர் என்ற எண்ணத்தில் பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர். அனைவரும் வாங்கிப் படிக்கும் வகையில் எளிமையான தமிழ்ச் சொற்களை, முடிந்தவரை பயன்படுத்தியிருந்தால் நூல் பலருக்கும் பயன்தரும்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்