Advertisement

OPEN YOUR UMBRELLA


OPEN YOUR UMBRELLA

₹ 225

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அல்கெமி, 48/11, 4வது தெரு, பார்வதி அவன்யூ, சக்தி நகர், போரூர், சென்னை - 116 (பக்கம்: 186) தகவல் தொழில்நுட்ப தொழிலில் பணியாற்றுவோர் பணிகளில் மேம்பாடு அடைய வழிகாட்டும் நூல். இத்தொழிலில் பணியாற்றும் பலருக்கு கவுன்சிலிங் செய்த அனுபவம்மிக்க ஆசிரியர், எளிதாக பல சிக்கல்களை விளக்குகிறார். அதனால் ஒரு நிறுவனத்தில் பாஸ் வெறுக்கும் தொழிலாளர் நிலை, ஆபீஸ் அரசியலில் சிக்காமல் தப்புவது எப்படி? தலைமைப் பொறுப்பை அடைய விரும்பினால் அதை எப்படி நிறைவேற்றுவது என்று பல தலைப்புகளாக சிறப்பாக அலசுகிறார். எப்படி ஒரு கூட்டுக் குடும்பத்தில் மோதல் வருமோ, அதேமாதிரி தான் அலுவலகமும் என்றும் விளக்குகிறார். குடும்பத்தை சமாளிப்பது போல பணியிடத்திலும் சமாளிக்க வழி கூறுகிறார். (பக்கம் 113) நீங்கள் எவ்வளவு தான் கெட்டிக்காரராக இருந்தாலும், உங்களை விட கெட்டிக்காரர் இருப்பார். அவர் வயதில் இளையவரானாலும், அவரிடம் விஷயத்தை தெரிந்து கொள்வதில் தவறில்லை. (பக்கம் 137) போட்டி உலகில் வேலைப்பளுவை சுமக்கும் பலருக்கும் பயன்படும் தகவல்கள் இந்நூலில் உள்ளன. அதனால் தான், அட்டையில் மழை நேரத்தில் பாதுகாப்பாக குடையுடன் இருக்கும் இளைஞர் படம் உள்ளது போலும்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்