Advertisement

ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல்


ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல்

₹ 110

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூபிக்கள் வரிசையில் ஒருவரான ஹஸ்ரத் ஆசாத் ரஸூல் பற்றி எடுத்துரைக்கும் நுால். ராஜஸ்தானில் தோன்றியவர். இயற்பெயர் குலாம் ரஸூல். குலாம் என்றால் அடிமை என்ற பொருள் கொண்டது. ரஸூல் என்பது நபிகள் நாயகத்தைக் குறிக்கும். நபிகள் நாயகத்தின் அடிமை என்னும் பொருள் கொண்டது. ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்பவராகவே இருக்கின்றனர். கொடுப்பவராக மாற வேண்டும் என்ற தத்துவச் சிந்தனையை விதைக்கிறது. உண்மையைக் கண்டறியும் தேடலில் தொடர்ந்தவருக்கு குருவாக வாய்த்தார் ஹஸ்ரத் சயீத்கான். அவர் அருட்செயல்கள் நிகழ்த்தியதாகக் கூறுகிறது. இறைநிலை தேடலில் ஞானியர் நிலையை தெளிவாக எடுத்துரைக்கிறது. மதம் கடந்த இறைநிலையைக் கண்டறிவதாக முடிகிறது நுால்.– முகிலை ராசபாண்டியன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்