Advertisement

இணையம் கற்போம்


இணையம் கற்போம்

₹ 100

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வயல்வெளிப் பதிப்பகம், இடைக்கட்டு, உட்கோட்டை (அஞ்சல்), கங்கைகொண்ட சோழபுரம்(வழி), அரியலூர் மாவட்டம்- 612 901. (பக்கம்:112) இணையம், இணைய தளங்கள் தொடர்பாக பதினைந்து கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இணையத்தைப் பற்றிய அறிமுகம் இல்லாத ஒருவர் இந்த நூலின் முதல் கட்டுரையைப் படித்த உடன் இணையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி, இணைய தளம் உருவாக்குவது எப்படி, இணைய இதழ்கள் எவை முதலான தகவல்களை இந்த நூல் எளிய தமிழில் விளக்குகிறது. தமிழ் இணைய தளங்களை உருவாக்கிய முன்னோடி, இணைய தளத்தில் ஏறிய முதல் இதழ், அச்சில் வரும் இதழ்களும் இணையத்தில் வெளியாவதன் நோக்கம் ஆகியவற்றை இந்த நூல் தெளிவுபடுத்துகிறது. தமிழில் மென்பொருள்கள் பலவற்றை உருவாக்கிய கோபியைச் சந்தித்து அவரது மென்பொருள் தொடர்பான தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார் நூலாசிரியர் மு.இளங்கோவன். கணினி, இணையம் தொடர்பான தமிழ் நூல்களில், ஆங்கிலச் சொற்கள், தமிழ் எழுத்துகளில் இடம் பெற்றுவந்த தன்மையை பற்றி, ஆங்கிலச் சொற்களைத் தமிழ்ப்படுத்தித் தந்திருப்பது இந்நூலின் சிறப்பு ஆகும்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்