Advertisement

மலர வேண்டும் மனிதநேயம்


மலர வேண்டும் மனிதநேயம்

₹ 70

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனிதநேயம் பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் விடை தரும் நுால். மனிதர் என்ற சொல், ‘இனியவை நாற்பது’ என்ற பழந்தமிழ் நுாலில் முதன்முதலில் இடம் பிடித்ததாக எடுத்து கூறுகிறது. கற்பூரமும், கடலுப்பும் நிறத்தால் ஒன்றாக இருந்தாலும் பண்பால் ஒன்றாகாது; அதன் பின்னணியுடன் பண்பால் உயர்ந்தால் மட்டுமே ஒருவனை மனிதனாக கருத முடியும் என்கிறது. உலகில் முதலில் தோன்றியது கடல்பாசி. அதில் உருமாற்றம், கருமாற்றத்தை குறிப்பிடுகிறது. ஆயிரம் பேர் செய்யும் வேலையை, ஒரு இயந்திரம் செய்யும் போது குடும்பங்களில் வறுமை அரங்கேறும் என்கிறது. மதத்தின் பெயரால் நடக்கும் போர், மத அடிப்படையை தகர்த்து விடுவதாக உரைக்கிறது. திரைப்படப் பாடல்களில் மனிதநேயத்தையும் காட்டும் நுால். – சீத்தலைச்சாத்தன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்