Advertisement

நபிகளாரின் சமூக உறவு

₹ 100

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முகமது நபிகள் பிற சமயத்தவர்களுடன் கொண்டிருந்த சமூக உறவை விளக்கும் நுால். இறைவனின் துாதராகப்பொறுப்பேற்ற உடனே ஏற்பட்ட அனுபவங்களை நபிகளார், ஒரு கிறிஸ்துவ சமய அறிஞரிடம் கலந்தாலோசனை செய்தது குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாகும். இறுதி வரை இஸ்லாமை ஏற்காத அபூதாலிப், அண்ணல் நபிக்கு பக்கபலமாக இருந்த நிகழ்வும், மக்காவிலிருந்து நபிகள் ஆலோசனைப்படி அபிசீனியாவுக்கு புலம்பெயர்ந்த முஸ்லிம்களை, நஜ்ஜாஷி மன்னர் பாதுகாத்த நிகழ்வும் சுட்டப்பட்டுள்ளன.முஸ்லிம் திருமணம், பெருநாள் உள்ளிட்ட மகிழ்வான தருணங்களில் பிற சமயத்தவரை அழைத்து, அன்பளிப்புகள் வழங்கி தோழமை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நபிகள் அறிவுறுத்தியதை கூறுகிறது. அனைத்து சமூகத்தினருக்கும் மிகப் பெரும் வழிகாட்டியாக அமைந்துள்ள நுால். – புலவர் சு.மதியழகன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்