Advertisement

ஓஷோ – உயர் வேதம்!

₹ 360

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழ்க்கையை அதன்வழி ஏற்றுக் கொண்டு ஞானம் எய்துவது எப்படி என்பதே உயர்வேதம் எனும் இந்நூலின் இலக்கு. துன்பங்கள் எத்தனை நேர்ந்தாலும் அவற்றை நினைவில் கொள்ளாமல் எப்படி வெல்வது என்பதை ஆணித்தரமாய் அஞ்ஞானிகளுக்கு விரித்துக் காட்டுவதே இந்நூலின் நோக்கம். இன்றைய சமுதாயம் எதிர் கொண்டுள்ள அரசியல் பிரச்னைகளுக்கும், வெகு அவசரமான சமூக பிரச்னைகளுக்கும் விடை தேடும் தனி நபர்களின் தாகத்தை தணிக்க கூடியதாய் விளங்குகிறது. வாழ்க்கை முறைகள் பற்றியும், தியானங்கள் பற்றியும் ஓஷோ ஆற்றிய சொற்பொழிவும் பொழிபெயர்ப்பாகும் இந்நூல்.இந்த பூமியிலுள்ள ஒவ்வொரு மனிதனும் மனித இனத்துக்கே பொருந்தாமல் நிற்கிறான். காரணம், மாறும் வாழ்க்கையில் அவன் மாறாத விடாப்பிடியான தோர் அமைப்பில் இருப்பதால், அவன் பொருந்தவே மாட்டான். ஏதோ இந்த வாழ்க்கையே அவனுக்கு எதிராய் இருப்பதை போல. ஆனால், உண்மை என்னவோ இதற்கு தலைகீழாய் உள்ளது. நீங்கள் உருவாக்கி பதனப்பட்டு வைக்கப்பட்டுள்ள விதம் தான் வாழ்க்கைக்கு எதிராய் உள்ளது.தியானத்தால் நீங்கள் தினமும் உங்களை சுத்தம் செய்து கொள்கிறீர்கள். என்கிறார் ஓஷோ. இந்நூலுள் கூறப்பட்டுள்ள உபநிடதங்களின் விளக்கங்கள் எளிமையாக உள்ளன. –புலவர் சு.மதியழகன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்