Advertisement

சர்க்கரை வியூகம்


சர்க்கரை வியூகம்

₹ 55

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கூறும் நுால். சித்த மருத்துவ சிகிச்சை முறை, மருந்துகள், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மன நலம் என, கவனம் கொள்ள வேண்டியவை குறித்து அறிவுறுத்துகிறது. சித்த மருத்துவத்தில் வரும்முன் காத்தல், நோய் அணுகாத விதிமுறை, உடல் இயக்க முறை பற்றிய தெளிவை முதல் பகுதி தருகிறது. உடல் கட்டுமானம் மற்றும் உணவில் சுவையின் பங்கு குறித்த விபரங்களை தெரிவிக்கிறது. நோய் வருவதற்கான காரணங்களை எடுத்து கூறுகிறது. நீரிழிவு நோயின் தன்மைகள் பற்றி மருத்துவ ரீதியான பார்வையை முன்வைக்கிறது. தொடர்ந்து நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளை எடுத்து கூறுகிறது. பாதிப்புகளை சரி செய்ய நிவாரண நடைமுறைகளையும் கூறும் நுால். – மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்