சுகாதாரம் பற்றி எளிமையாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். முதலில், ‘சுகாதாரம் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் துவங்குகிறது. சுகாதார நடைமுறைகளின் முக்கியத்துவம் இதில் வலியுறுத்தப்படுகிறது. அடுத்து, ‘உணவுப் பழக்கமும் சுகாதாரமும்’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது. உணவுக்கு உள்ள முக்கியத்துவம் இதில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அடுத்து, ‘வீட்டினுள் சுகாதாரம்’ என்ற தலைப்பில் கட்டுரை உள்ளது. குடும்பத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய தகவல்கள் இந்நுாலில் அடங்கியுள்ளன.
– மலர்