முகப்பு » கட்டுரைகள் » சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌

விலைரூ.70

ஆசிரியர் : பி.என்.பர‌சுராமன்

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: 978-81-8476-097-2

Rating

பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84

வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற அனைத்தும் அவர்கள் நேரடியாக தங்களது வாழ்விலிருந்து அனுபவித்து, ஆராய்ந்து சொல்லியவை. அவை வெறும் வார்த்தைகள் அல்ல!
தங்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு சிறந்ததொரு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்பதற்காகவே பெரியவர்கள் அவற்றை நமக்கு அவ்வப்போது அறிவுறுத்தியும் வலியுறுத்தியும் வந்திருக்கிறார்கள்.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்கிறார்களே... எதற்கு? காலை நேரச் சூரியனிலிருந்து வெளிவருகிற ஒளிக்கதிர்களில் கண்ணுக்குத் தேவையான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. ஆகவே, தினமும் சூரியநமஸ்காரம் செய்துவந்தால் சூரிய ஒளிக்கற்றைகள் கண்களில் பட்டு பார்வையில் இருக்கிற சிறுசிறு குறைபாடுகளும் நீங்கி, கண் சீராக இருக்கும். அன்றி, பார்வைக் குறைபாடு ஏற்பட்ட பிறகு சூரியநமஸ்காரம் செய்வது எந்தவிதத்திலும் கண்ணுக்குப் பலன் அளிக்காது என்பதே அதன் பொருள்.
இப்படி பெரியவர்கள் சொல்லியிருக்கிற பல கருத்துக்களை, கதாபாத்திரங்களின் வழியே, எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளது.
சக்தி விகடன் இதழில் சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! என்ற தலைப்பில், இந்தக் கட்டுரைகளை பட்டாபி என்ற புனைப் பெயரில் எழுதிவந்தார் பி.என்.பரசுராமன். கற்றலின் கேட்டல் நன்றே என்கிற வகையில், அந்தக் கட்டுரைகள், பெரியவர் ஒருவர் பல நல்ல அரிய விஷயங்களைப் பேசுவது போலவும், அவற்றைப் பேரன் பேத்திகள் முதல் மகாஜனங்கள் வரை கேட்பது போலவும் அமைந்திருந்தன‌. அவற்றின் தொகுப்பே இந்நூல். தாத்தா கதை சொல்வதை அவர் அருகில் உட்கார்ந்து கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் இன்றைய தலைமுறையினர் படித்துப் பின்பற்ற வேண்டியவை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us