முகப்பு » இலக்கியம் » சமு­தாயப் பார்­வையில் மணி­மே­கலை

சமு­தாயப் பார்­வையில் மணி­மே­கலை

விலைரூ.110

ஆசிரியர் : கே.ஜீவ­பா­ரதி

வெளியீடு: ஜீவா பதிப்­பகம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மணி­மே­க­லையின், முன்­க­தை­யா­கிய சிலப்­ப­தி­கார ஆராய்ச்­சியில் தொடங்கிப் பதி­கமும், வஞ்சிக் காண்­டமும், இளங்­கோ­வ­டி­களால் இயற்­றப்­ப­ட­வில்லை எனக் காட்டி, இளங்­கோ­வுக்கு கண்­ணகி கதையை சொன்­னவர் சாத்­தனார் என்­பது சரியா என வினவி, ‘மணி­மே­கலை’ படைத்த சாத்­த­னாரும், சங்­கத்துச் சீத்­தலைச் சாத்­த­னாரும் ஒரு­வ­ரல்லர் என, நிறுவிச் செல்­கி­றது இந்த நூல்.
பசிப்­பிணி அறுத்த பாத்­தி­ர­மான மணி­மே­க­லையைச் செதுக்­கி­யுள்ள பாங்­கினை, வியந்து விதந்து சொல்­கி­றது. பொது­வு­டைமைச் சிந்­த­னை­யா­ள­ரா­கிய நூலா­சி­ரியர், தம் கருத்­திற்­கேற்பச் சமு­தாயப் பணியை, மணி­மே­கலை தன்­னலம் துறந்து ஆற்­றிய திறத்தைப் பாராட்­டு­கிறார்.
‘பிச்சை எடுத்­த­போது கிடைத்த உணவைத்  தான் உண்­ணாமல், கூன், குருடு, செவிடு, நொண்டி எனக் குறை­பாடு உடை­ய­வர்­க­ளையும் பசிப்­பி­ணியால் வாடு­வோ­ரையும் தேடிப்­பி­டித்து, அவர்­களின் பசி­யாற்­றி­யபின் மீதி­யி­ருப்­பதை உண்ணும்’ ஆபுத்­தி­ர­னுக்கு அமு­த­சு­ரபி கிடைத்­தது. பின்னர் மணி­மே­க­லைக்கு அந்­தப்­பேறு வாய்த்­தது.
பெண்கள், அந்தக் காலத்­திலும் எப்­படிப் பாது­காப்­பின்றி இருந்­தார்கள், காலம்­கா­ல­மாக ஆண்­களின் சிந்­த­னை­யோட்டம் எப்­படித் தடு­மா­றி­யது என்­பன பற்றி எல்லாம், விரித்து எழுதி உள்ளார். ‘பொது­வாழ்க்­கையில் ஈடு­ப­டு­ப­வர்­களும், ஆட்சி அதி­கா­ரத்தில் இருப்­ப­வர்­களும், ஆட்சி அதி­கா­ரத்தில் இருப்­ப­வர்­களும் தங்­க­ளு­டைய சேவையை தேவை­யா­ன­வர்­களைக் கண்­ட­றிந்து அவர்­க­ளுக்குச் செய்ய வேண்டும்’ என்­பது வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது.
சிலம்புச் செல்வர், ம.பொ.சி., தொ.மு.சி.ரகு­நாதன், மயிலை சீனி வேங்­க­ட­சாமி, சாமி.சிதம்­ப­ரனார் நூல்கள், இந்­நூ­லுக்கு நிரம்­பவும் பயன்­பட்­டுள்­ளன. படித்துப் பயன்­கண்டு, ஆராய்ச்சி மனப்­பாங்கை வளர்த்துக் கொள்ள மிகவும் பயன்­படும் நூல் இது.
கவிக்கோ ஞானச்­செல்வன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us