முகப்பு » கட்டுரைகள் » இராமன் கதை

இராமன் கதை

விலைரூ.430

ஆசிரியர் : முனைவர். ச.லோகாம்பாள்

வெளியீடு: அருள் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ராமாயணத்தை பல கோணங்களிலும் நுணுக்கமாக ஆராய்ந்தெழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ராமாயண பாத்திரங்கள் ஒவ்வொன்றையும், கதைப் போக்குடன் தம் ஆய்வுக் கருத்துகளை நிறுவுகிறார் நூலாசிரியர். ராமபிரானின் குணநலன்களை அடுக்கிக் கூறும் நூலாசிரியர், ‘ராமன் மாபெரும் மன்னன் என்ற இறுமாப்பின் உருவமாகவே காட்சியளிக்கிறான்’ என்றும், ‘கோபத்தால் பொறுமை இழந்து அரக்கர் முதலானோரைக் கொன்று குவித்த கொடியவன் ராமன்’ என்றும் கூறும் கருத்துகள், இந்த நூலை படிப்போருக்கு  நெருடலாகவே இருக்கும்.
தசரதன், ராமனுக்கு மட்டும் செல்வத்தைக் கொடுக்க முடிவு செய்து வஞ்சனை செய்தான்; தவறு செய்தான். ஆனால், நல்லவளாகிய கைகேயி, அதை ராமன் முதலிய நால்வரும் பெறுவதற்கு உதவினாள். ஒருவருக்கு (ராமனுக்கு) சாதகம்  செய்வதன் மூலம், மற்ற மூவருக்கும் உண்டாக இருந்த பாதகத்தை போக்கவே, கைகேயி  மனம் மாறி உறுதி பூண்டாள். முடிபுனைந்து ஏற்க இருந்த அரசு சுமையை, ராமனுடைய தோள்களில் இருந்து இறக்கி அவனுக்கு உதவினாள்.
இவ்வாறெல்லாம் கைகேயியை உயர்ந்தவளாக படம் பிடித்துக் காட்டுகிறார் நூலாசிரியர். ‘கோசலையுடனும், கைகேயியுடனும் ஒற்றுமையாக வாழ்ந்தமையால், சுமித்திரை அண்டிப் பிழைக்கும் குணம் உடையவள்’ என்பதும், ‘கைகேயி மீது  காழ்ப்பு கொண்டு, அவளோடு பழகுவதைத் தவிர்த்தாள் கோசலை’ என்பதும், இந்த நூலின் ஆராய்ச்சிக் கருத்துகள். மேற்கோள்களாக அமையும் திருக்குறள் பாக்களை, குறள்வெண்பா  வடிவிலேயே அச்சிடாமல், கண்டபடி அச்சிட்டுள்ள முறையை தவிர்த்திருக்கலாம்.
குறட்பாவில், ‘உள்ளினேன்’ என்பதை, ‘உன்னினேன்’ என, பிழையாக அச்சிட்டுள்ளதை  (பக்.269), அடுத்த பதிப்பில் சரி செய்யலாம்.
ராமாயண கதையையும், கருத்துகளையும் அறிந்துகொள்ள உதவும் ஆய்வு நூல்.
-பேரா.ம.நா.சந்தான கிருஷ்ணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us