முகப்பு » கதைகள் » கதைகளின் கதை

கதைகளின் கதை

விலைரூ.160

ஆசிரியர் : ம. மணிமாறன்

வெளியீடு: விஜயா பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
முப்பத்தியிரண்டு தமிழ் முன்னணி எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனப் பார்வையை நம் முன் வைக்கிறார், ம.மணிமாறன்.
சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் – மனிதர்களின் உணர்ச்சி பெருக்கை கதைகளமாக்கிய மவுனி – அகத்தின் கேள்வியை புறத்தே கண்டெழுதிய, ந.பிச்சமூர்த்தி – பெண் உலகின் மாயங்களை கண்டெழுதிய, கு.ப.நா., – தஞ்சை பெருவெளியின் அதீத கணங்களை, கதை ஆக்கிய, தி.ஜானகிராமன்.
மனிதகுலம் சுமக்கிற புறக்கணிப்பின் சொற்களை கதை ஆக்கிய, கிருஷ்ணன் நம்பி –  அழகின் வசீகரத்தை சொல்லாக்கிய, லா.ச.ராமாமிருதம் – வெகுஜன எழுத்தில் ருசியேற்றிய விந்தன் – முற்போக்கு மனதை கதைகளாக்கிய வல்லிக்கண்ணன் – அம்பாரத்தில் கரிசலை அள்ளி தந்த பூமணி – புதிய கோடுகளை தமிழ்ப்புலத்தில் வரைந்திட்ட எழுத்து கலைஞன் ஜெயகாந்தன் – வெகுஜன எழுத்தின் மாயமறிந்த கல்கி – வாழ்விற்கும், எழுத்திற்குமான கோட்டை இல்லாமலாக்கிய எழுத்து கலைஞன் ஜி.நாகராஜன் – தன்னையே தோலுரித்து காட்டிய, தனியன்.
நகுலன் கதை சொல்லிகளின் கதை எழுதிய, கரிசக்காட்டு சம்சாரி கி.ராஜ நாராயணன் – ரோட்டோரத்து வாழ்வை காட்சியாக்கிய கலைஞன் ஆ.மாதவன் – எல்லாவற்றையும் ஏன்? என, கேள் பெண்ணே – இது உன் உலகம் என, சொன்ன அம்பை – போன்றோரை பற்றிய ஆசிரியரின் விமர்சனம் பக்கங்கள் அபாரமானவை.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us