முகப்பு » பொது » சின்னச் சின்னச் செய்திகள்

சின்னச் சின்னச் செய்திகள்

விலைரூ.300

ஆசிரியர் : சீத்தலைச் சாத்தன்

வெளியீடு: ஒப்பில்லாள் பதிப்பகம்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
அரசியல் ஆளுமைகள், ஆன்மிகவாதிகள் அனுபவ பிழிவும், மருத்துவ குறிப்புகளும் கொண்ட நுால். சொத்து சேர்ப்பதில் போதும் என்ற மனம் வேண்டும்; சேவை செய்வதில் போதாது என்ற மனம் வேண்டும். கதர் என்ற அரபு சொல்லுக்கு கவுரவம் என்று பொருள்; அதனால் தான் கைத்தறி ஆடையை கதர் என்று அழைத்தார் காந்திஜி.

‘வாலிபம் என்பது வரைவின் வாசல்; வயோதிகம் என்பது செயலின் மிச்சம்’ போன்ற ஹைக்கூ கவிதைகளும் உள்ளன. வேளாங்கண்ணி ஆலயத்திற்கு ஹிந்துக்கள் வரவேற்கப்படுகின்றனர்; நாகூர் தர்காவிலும் ஹிந்துக்கள் வரவேற்கப்படுகின்றனர்; சபரிமலை சாஸ்தாவின் தரிசனத்திற்கும் முஸ்லிம்கள் வரவேற்கப்படுகின்றனர்; பிறகு ஏன் வர்க்க பேதம் என்பது போன்ற கேள்வியை உள்ளடக்கியுள்ளது.

‘நான் திருநீறு அணியாத ஹிந்து’ என சுவாமி சின்மயானந்தா கூறியது உட்பட பல கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. கருத்துகள் அடங்கிய செய்திக் களஞ்சியம்.

புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us