முகப்பு » மாணவருக்காக » ஆங்கில இலக்கண வழிகாட்டி

ஆங்கில இலக்கண வழிகாட்டி

விலைரூ.170

ஆசிரியர் : மல்லிகா பலராமன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஆங்கில இலக்கணத்தை அறிந்து கொள்ள வழிகாட்டியாக விளங்கும் நுால். மொழியின் அடிப்படை அமைப்பை பகுதியாக பிரித்து விவரித்து புரிய வைக்கிறது.

ஆங்கில மொழி பேசுவதில் உள்ள அடிப்படை கூறுகளை முதலில் விவரிக்கிறது. தொடர்ந்து வாக்கிய அமைப்பு முறை பற்றி எளிமையாக தருகிறது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் விவரிப்பதால் புரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது. இலக்கண விளக்கத்தை சுலபமாக நினைவில் பதிய வைக்கிறது.

ஆங்கில இலக்கணத்தின் அனைத்து கூறுகளும், நான்கு பகுதிகளாக பிரித்து எழுதப்பட்டுள்ளன. விளக்கங்கள் எளிமையாக உள்ளதால், புரியவும், எழுதவும், கற்கவும், பேசவும் உறுதுணையாக இருக்கும். ஆங்கில மொழி இலக்கண அடிப்படையை கற்க உதவும் விளக்க நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us