முகப்பு » இலக்கியம் » ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி

ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி

விலைரூ.110

ஆசிரியர் : சக்தி

வெளியீடு: த.சோமசுந்தரம் அவ்வை

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
த.சோமசுந்தரம் அவ்வை, எண்: 1, புதூர்-13வது தெரு அசோக்நகர், சென்னை- 600 083. போன்: 32873546, (பக்: 312)

நோபல் பரிசு பெற்ற கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி (103 பாடல்கள்) தமிழ் மொழி பெயர்ப்பாக வெளிவந்துள்ளது.

இடது பக்கத்தில் ஆங்கில மூலமும் வலது பக்கத்தில் தமிழாக்கமும் தரப்பட்டுள்ளன. வார்த்தைக்கு வார்த்தை இறக்குமதி என்று இல்லாமல், ஆன்ம சரணாகதியின் அனைத்து உணர்வுகளும் பரிமளிக்கும்படி அமைந்துள்ளது இந்நூலின் தனிச் சிறப்பு.

முழுமையும் மரபுக்கவிதை என்றோ புதுக்கவிதை என்றோ சொல்ல இயலாது. தாகூரின் உள்ளத்தில் உள்ளவை, வெளிப்பட்ட விதமாகவே தமிழ்ச் சொற்கள் பாங்குற அமைந்துள்ளன.

`குறையிலா அன்பினிலே, கொடுப்பதனை ஏற்பதனால் குறைவதும் வாராது' கொடுப்பதனை எடுத்துக் கொள் (பக் 25) The sky is overcast with clouds வானத்தை மேகம் கப்பிக் கிடக்கிறது (பக் 78- 79)Where tireless striving stretches its arms towards perfection& முழுமையை அடைவதற்கு முட்டாமல் முயன்றிடுவார் (பக் 94- 95) என்பவை நெஞ்சைத் தொடுகின்றன.

`எத்தனை பேர் என் மகனைக் கேட்டு வந்தார்' `மகளை' என்று இங்கே வரவேண்டும். அச்சுப் பிழையோ (பக்: 201) பக்கம் 184- 185, 62வது பாடலில், தாகூர் இறைவனைத் குழந்தையாக பாவித்து, சிறிய காணிக்கையாக எடுத்துச் செல்ல, அக்குழந்தையின் பிரதி காணிக்கை அருள் வெள்ளமென பெருகுவது, தமிழ் மொழிபெயர்ப்பில் சற்று இறங்குமுகமாகக் காணப்படுகிறது.

பலமுறை படித்து பயனுற வேண்டிய பாராட்டுக்குரிய படைப்பு!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us