முகப்பு » ஜோதிடம் » புதிய வாஸ்து விஞ்ஞானம்

புதிய வாஸ்து விஞ்ஞானம்

விலைரூ.130

ஆசிரியர் : கே.சுப்ரமணியன்

வெளியீடு: திருவரசு புத்தக நிலையம்

பகுதி: ஜோதிடம்

Rating

பிடித்தவை
திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 188.)

வாஸ்து குறித்த கருத்துரைகள், மாதிரி வரைபடங்கள், விளக்கப் படங்கள் வாயிலாக இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. மனையைத் தெரிவு செய்வது முதற்கொண்டு, அதன் உச்ச நீச்ச அமைப்புகளைக் கண்டறிந்து, தலைவாசல், `கேட்' வைப்பது, `தெருக் குத்து' போன்ற மனைகளுக்கான தோஷ நிவர்த்திகள், பூஜை , சமையல், குளியல் அறைகள் மற்றும் சாப்பிடும் இடம் ஆகியவை அமையப் பெறவேண்டிய விவரங்களும் உண்டு. மேலும் வீட்டு உபயோகப் பொருட்களான பிரிஜ், `டிவி,' பீரோ வைக்கும் இடங்கள் போன்ற நுணுக்கமான அம்சங்களையும் குறிப்பிட்டுள்ளார் பொறியாளரான இந்நூலாசிரியர்.ஜோதிடத்துக்கும், வாஸ்துவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. எனவே, தலைவாசல் வைப்பதற்கான திசைக்கும், நவக்கிரகங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை (பக்.16-18) போன்ற கருத்துக்கள் உண்டு.வாஸ்து பற்றுள்ளவர்களுக்காகவே நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us