முகப்பு » வரலாறு » அல் காயிதா (பயங்கரத்தின் முகவரி)

அல் காயிதா (பயங்கரத்தின் முகவரி)

விலைரூ.60

ஆசிரியர் : பா.ராகவன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை
கிழக்கு பதிப்பகம், 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், (சென்னை-4. பக்கம்: 134).

"அல்காயிதா' ஒரு பயங்கரவாத அமைப்பு, உலகம் முழுவதும் இஸ்லாமிய தீவிரவாதிகளைக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் பிதாமகன், ஒசாமா பின்லாடன். இந்த அமைப்பின் தோற்றம், பரப்பு, செயல், வளர்ச்சி, தளர்ச்சி என அனைத்து விவரங்களையும் அடி முதல் நுனி வரை ஒன்று விடாமல் அலசி ஆராய்கிறது இந்தப் புத்தகம்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளிவந்துள்ள புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு, வலைத்தளங்களின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் துணையுடன் பா.ராகவன் எழுதியுள்ள இந்தப் புத்தகம் தமிழர்களின் வாசிப்பு தளங்களை விரிவுபடுத்தி, அகலப் பார்வைக்கு வழி நடத்திச் செல்கிறது. ஏற்கனவே 9/11, பாலஸ்தீனம் போன்ற பல சர்வதேச நிகழ்வுகளை புத்தக வடிவில் வழங்கியுள்ள ஆசிரியரின் இந்தப் புத்தகமும் முன்னது போல் சிறப்பாகவே உள்ளது. சுவைபட, கோர்வையாக, வாசகனுக்கு அலுப்புத் தட்டாமல் எழுதப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பு.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us