முகப்பு » மருத்துவம் » மேயோ கிளினிக் உடல்நலக் கையேடு

மேயோ கிளினிக் உடல்நலக் கையேடு

விலைரூ.250.100

ஆசிரியர் : சிவசுப்ரமணிய ஜெயசேகர்

வெளியீடு: அடையாளம்

பகுதி: மருத்துவம்

Rating

பிடித்தவை
மேயோ கிளினிக் உடல்நலக் கையேடு (பக்கம் 484); மேயோ கிளினிக் நீரிழிவைச் சமாளிப்பது எப்படி? (பக்கம் 240) வெளியீடு: அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி மாவட்டம்- 621310. தொலைபேசி எண்: 04332-273444

"மேயோ கிளினிக் கைடு டு செல்ப் கேர்' என்னும் ஆங்கில நூலின் நான்காவது பதிப்பின் தமிழாக்கம் முதல் நூலான உடல் நலக் கையேடு. இந்த நூலில் அவசர சிகிச்சை, பொதுவான நோய்க்குறிகள், பொதுவான பிரச்னைகள், குறிப்பிடத்தக்க அறிகுறிகள், மனநலம், ஆரோக்கியமாக வாழ்தல், உடல்நலமும் பணியிடமும், ஆரோக்கியமான நுகர்வோர் என்னும் எட்டுப் பிரிவுகளில் பொதுவான மருத்துவ பிரச்னைகள் பற்றி எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய வகையில், ஏராளமான தகவல்கள் அளிக்கப் பட்டுள்ளன.
உதாரணமாக, அவசர சிகிச்சை பகுதியில், மூச்சுத் திணறல் அல்லது மாரடைப்பு ஏற்பட்டுள்ள ஒருவருக்கு எவ்வாறு உதவுவது, பூச்சிக்கடிகள், ஒவ்வாமையின் எதிர்விளைவுகள் போன்றவற்றை கையாளும் முறை மற்றும் அவை ஏற்படாமல் தவிர்க்க தன்கவனிப்பு குறிப்புகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.
இந்த நூலின் மிகப் பெரிய பகுதி பொதுவான பிரச்னைகள் பகுதி. இப்பகுதியில் கண், காது, மூக்கு, தோல், வயிறு, தொண்டை, முதுகு, கை, கால்கள் போன்ற பகுதிகளில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள் குறித்து விளக்கமான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது நூல் "மேயோ கிளினிக் ஆன் மேனேஜிங் டயபடிஸ்' என்னும் ஆங்கில நூலின் இரண்டாவது பதிப்பின் தமிழாக்கம். இந்த நூலில் நீரிழிவு நோய் வராமல் தடுக்கும் வழிகள், தீவிர நோய்ச் சிக்கல்களுக்கு ஆளாக கூடிய அபாயத்தைக் குறைப்பது மற்றும்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை
களுக்கான தனிச்சிறப்பான ஆலோசனைகள் போன்றவை எளிமையாகக் கொடுக்கப் பட்டுள்ளன.
மேலும், நீரிழிவு நோய் தொடர்பான அடிப்படைத் தகவல்கள் தொடங்கி, நீரிழிவு நோயின் அபாயங்கள், நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது, ஆரோக்கியமான உணவுப்பழக்க
வழக்கம், நோய்க்கான மருத்துவ சிகிச்சைகள் உட்பட பல விஷயங்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியின் இறுதியிலும், நீரிழிவு நோய் சம்பந்தமான சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இடம்பெற்றுள்ளன.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (பாகம்-2)
ஆசிரியர்: பேராசிரியர்.எஸ்.சுவாமிநாதன், வெளியீடு: வசந்தா பிரசுரம், 15, (பழைய எண்.6), ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. தொலைபேசி எண்: 24742227. (பக்கம்:224, விலை:ரூ.110)
இந்த நூலில் ஒவ்வொரு விதமான நோய், அது ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் போன்றவை கேள்வி பதில்களாக இடம் பெற்றுள்ளன.
முடி உதிர்வை தடுத்து, கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர என்ன செய்ய வேண்டும்? கணைச்சூடு நீங்க என்ன செய்வது? உட்பட வாசகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு, ஆயுர்வேத முறைகளிலான மருந்துகள் மூலம், இந்த நூலில் தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us