/ புத்தக மதிப்புரை / அப்பா என்றால் ஆயிரம் வானம்

₹ 180

தந்தையுடன் ஏற்பட்ட அனுபவங்களை சுவாரசியமிக்க கவிதைகளாக தரும் நுால். அன்பின் பிணைப்பை மேன்மையாக வெளிப்படுத்துகிறது. ‘அப்பாக்கள் கைவசம் இருப்பவை’ என்ற தலைப்பில் துவங்கி, அனுபவத்தை நுட்பமான உணர்வுகளாக கடத்துகின்றன கவிதைகள். தந்தையிடம் பெற்ற அறிவுரைகள், வழிகாட்டல்கள், தெளிவு ஏற்படுத்திய செயல்பாடுகள் என பல்வேறு வகைமையாக நெகிழ்வூட்டுகிறது. கவிதைகள், தந்தையுடன் அனுபவத்தை பெற்ற காலக்கட்டத்தை நுணுக்கமாக படம் பிடிக்கின்றன. குடும்ப பொருளாதாரம், அதை சமாளிக்க தந்தை அனுபவித்த சிரமங்கள் என, வாழ்வில் நிலவிய சிக்கல்கள் குறித்தும், அவை தீர்க்கப்பட்டதையும் மனக்கண் முன் கொண்டு வருகின்றன. தந்தை என்ற உறவில் இருக்கும் நெருக்கத்தை நெகிழ்வாக காட்டும் நுால். – மதி