/ புத்தக மதிப்புரை / அறுசுவை
அறுசுவை
உணவு சார்ந்த விஷயங்களை நகைச்சுவையாக கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். களிமண் பிள்ளையாருக்கும், ‘தலையில் களிமண்ணா வைத்திருக்கிற...’ என கேட்பதற்கும் உள்ள தொடர்பை கூறி சிந்திக்க வைக்கிறது. வாழைக்காய் பற்றிய உண்மையை, ‘வாழக்காவ சுடணும்’ கதை சுவாரசியமுடன் கூறுகிறது. பக்கத்து வீட்டு சிறுவன் பிறந்த நாளுக்கு வெட்டிய கேக் தொடர்பான, ‘நம்பிக்கேக்’ கதை, பிறர் உணர்வை மதிக்க கற்று தருகிறது. மனைவி மரதோசை கரண்டியால் அடிப்பதை ஏற்ற கணவர் பற்றிய கதை, ‘ஆடி வெள்ளியும் அரிசி பாயசமும்’ சுவாரசியமாக இருக்கிறது. அண்டாவுக்கும், முட்டைக்கும் வித்தியாசம் தெரியாமல் உரையாடியதை, ‘அம்பது ரூபாய் அண்டா’ கதை சிந்திக்க வைக்கிறது. சாப்பிட மட்டுமல்ல, நற்குணங்கள் சமைக்கவும் கற்று தரும் நுால். – டி.எஸ்.ராயன்




