/ கதைகள் / ஒளவையார் ஆத்திசூடிக் கதைகள்

₹ 40

பக்கம்: 128 நீதிக்கதைகள் படிப்பது, பொழுது போக்குவதற்கு மட்டுமில்லாமல், நம் மனதையும் செம்மைப்படுத்த உதவும் என்பதில் ஐயமில்லை. இக்கால இளைஞர்கள், பலர் நீதிக்கதைகளை நன்கு ஓதாதினால் தான் தீய பழக்கங்களுக்கு அடிமைப்படுகின்றனர். கல்விச் சாலைகளிலும் நீதிபோதனைகள் குறைந்து விட்டன; இதற்குக் காரணமாக இருக்கலாம். அக்குறையைப் போக்க, இது போன்ற நூல்களைப் பெற்றோர் வாங்கி, தம் குழந்தைகளின் பிறந்த நாள் போன்ற சிறப்பான நாட்களில் பரிசாகக் கொடுக்கலாம். இந்நூலில், 30 முத்தான கதைகள் உள்ளன. படிப்பதற்கு எளிய தமிழில் உள்ளதால், அனைவரும் படிக்கலாம். தற்காலத்திற்கு ஏற்ற கதைகள் இருப்பதால் அனைவரும் ஆர்வமுடன் படிப்பர்.தம் பிள்ளைகளுக்குப் பெற்றோர் வாங்கித் தரவேண்டிய நல்லநூல்.


புதிய வீடியோ