/ வாழ்க்கை வரலாறு / விடுதலை வீரர் கே.எம்.எஸ் – 100
விடுதலை வீரர் கே.எம்.எஸ் – 100
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகியின் வாழ்க்கை வரலாற்று நுால். இந்திய சுதந்திர போராட்ட வரலாறு, முக்கிய தலைவர்களின் செயல்பாட்டால் மட்டும் நிறைவேறவில்லை; ஆயிரக்கணக்கான தியாகிகளின் வேதனையும், கனவுகளுமே சுதந்திரத்தின் உண்மை வரலாறு என சுட்டிக்காட்டுகிறது. அத்தகையோரில் தியாகி கே.எம்.சுப்பையா பற்றிய விபரங்களை அறிய தருகிறது. வாழ்நாள் முழுதும் தேசம், மக்கள் நலம், மனிதநேயத்தை குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்ததை குறிப்பிடுகிறது. இளமை கால போராட்டம், சிறை வாழ்க்கை, பொதுவுடைமை இயக்க தொழிற்சங்க பணி, இலக்கிய சேவை, மக்கள் நலப்பணிகள் என, பன்முக பரிமாணங்களில் விரிகிறது. எளிய நடையில் அமைந்துள்ள நுால். – சிவா




