/ வரலாறு / இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் வரை
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் வரை
விமானப்படையைச் சேர்ந்த ஸ்வாடன் லீடர் சந்தீப் குமார் - அகுஜா, பாகிஸ்தானில் அகப்பட்டுக் கொள்கிறான். பாகிஸ்தான் ராணுவம், ஐ.எஸ்.ஐ., - காவல் துறை - இவர்களிடம் அகப்படாமல் எப்படி அகுஜா - இந்தியாவிற்குத் தப்பி வருகிறான் என்பதை ஒரு விறு விறுப்பான நூலாக எழுதியிருக்கிறார் குருபிரசாத்.பல வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய நூல். நம் பொருளாதாரத்தை அழிக்க நினைக்கும் அண்டை நாடுகளில் இருந்து, நம் நாடு பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு நம் ராணுவம் பலப்படுத்தப்படவேண்டும். நாட்டுப் பற்றுக் கொண்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர வேண்டும். அந்த இளைஞர்களை உருவாக்கும், வீரமான ஆக்க வேலையை இந்த அருமையான நாவல் முனைப்புடன் செய்கிறது.